LATEST NEWS
கடைசில இப்படி ஆயிடுச்சே… திரிஷாவாக ஆசைப்பட்டு கீர்த்தி சுரேஷாக மாறிய ஜனனி… அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் இலங்கை பெண்ணான ஜனனி. ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கைகள் ரசிகர்களை கவரும் விதமாக இருந்தாலும் ஏராளமானோர் ஜனனியை ஆதரித்தனர்.
தன்னுடைய எதார்த்தமான சிரிப்பாலும் குழந்தைத்தனமான செயல்பாடுகளாலும் பல ரசிகர்களுக்கு விருப்பமான ஒருவராக மாறினார். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இந்தியாவில் வசித்து வரும் இவர் தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தளபதி 67 அதாவது லியோ திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது விளம்பரங்கள், திரைப்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்கள் என பிசியாக இருந்து வருகின்றார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தற்போது 90ஸ் நடிகை லுக்கில் நீலநிற ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்க்கும் போது கீர்த்தி சுரேஷ் போல இருக்கின்றார். இதுவரை திரிஷா என கூறிய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சிரேஷ் என கூறி வருகிறார்கள். தற்போது அந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
