VIDEOS
“என் ஹீரோ, என் ரோல் மாடல் தோனி தான்”.. டீசட்டில் ஆட்டோகிராப் வாங்கிய வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் விக்னேஷ் சிவன். இவர் தோணியுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். தோனியிடம் டி சர்ட்டில் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்து உருக்கமான பதிவையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் என்னுடைய கேப்டன், என்னுடைய ரோல் மாடல், இந்த தூய மனிதனுக்கு அருகில் இருப்பது என்பதை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் மிகவும் நேசிக்கும் ஒரு மனிதன் என்றால் அது தல தோனி மட்டும் தான். அவரைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி தோன்றும் என்று நிகழ்ச்சியாக வீடியோவை பகிர்ந்து உள்ளார்.
தல தோனி தனது மனைவியுடன் இணைந்து தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். தோனி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர் ஹரிஷ் கல்யாணி ஹீரோவாக வைத்து LGM என்ற லவ் சப்ஜெக்ட் கதை ஒன்றை தயாரித்து உள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
