VIDEOS
வண்ணாரப்பேட்டையில பாடலுக்கு நடனமாடிய சிவகார்த்திகேயன், அதிதி சங்கர்… வைரலாகும் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழும் சிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்க யோகி பாபு, சுனில் மற்றும் சரிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
அதேசமயம் படத்தில் ஒலிக்கும் குரலாக விஜய் சேதுபதியும் மாவீரன் திரைப்படத்தில் இணைந்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மாவீரன் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த உதயநிதி சக்சஸ் என்பதை குறிக்கும் வகையில் twitter பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வண்ணாரப்பேட்டையில் என்ற பாடலுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
