LATEST NEWS
“எனக்கு பேர் வச்சதே அவர்தான்”… 90s நடிகர் சார்லி உருக்கம்… பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்..!!
தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து திகழ்தவர்தான் நடிகர் சார்லி. குறிப்பாக இவர் 90களில் நடித்த படங்களின் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
இவர் ஆனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அந்த காலத்தில் தன்னுடைய மகன்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத சார்லி தன்னுடைய மகன்களை நன்றாக படிக்க வைத்த நிலையில் தற்போது இருவரும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டனர்.
இந்நிலையில் சார்லி மகனுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது 63 வயதாகும் சார்லி சினிமாவில் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார். சார்லியின் உண்மையான பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர் என்பதாகும். இந்த பெயர் சினிமாவிற்கு சரியாக வராது என கே பாலசந்தர் சார்லி என்று பெயர் மாற்றிவிட்டார்.
இதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சார்லி சுமார் 800 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்த சார்லி, 1983 ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தில் முதல் முதலாக சினிமாவில் நுழைந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் இவருக்கு சார்லி என்ற பெயர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
