அய்யோ கொடுமை..! நீச்சல் குளத்தில் பாய்ந்த மின்சாரம்… 2 வெளிநாட்டவர்கள் பரிதாப பலி.. சொகுசு 5 ஸ்டார் ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமை..! நீச்சல் குளத்தில் பாய்ந்த மின்சாரம்… 2 வெளிநாட்டவர்கள் பரிதாப பலி.. சொகுசு 5 ஸ்டார் ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் குளித்தபோது மின்சாரம் பாய்ந்து வெளிநாட்டவர் 2 பேர் பலியாகினர். பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் ஜெர்மனைச் சேர்ந்த விமான நிறுவனப் பணியாளர் உள்பட இரு வெளிநாட்டினர் தங்கியிருந்தனர். அந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் இருவரும் நேற்று குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மின்சாரம் பாய்ந்ததால், இருவரும் பலியானதாகக் கூறப்படுகிறது.

பலியான நபர்கள் ஜெர்மனைச் சேர்ந்த லுப்தான்சா விமான நிறுவனத்தின் பணியாளர் அலெக்சாண்டர் மாக்சிமிலியன் தீஸ் (57) மற்றும் ஐபிஎம் நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணியாற்றிய ஜுராஜ் ஹோர்வாட் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். போலீசாரின் தகவலின்படி, ஹலசூரு பகுதியில் உள்ள அந்த நட்சத்திர ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நேற்று மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் குறிப்பிட்டனர். மின்சாரம் தாக்கியதற்கான காரணங்கள் தொடர்பான விவரங்களை காவல்துறையினர் வழங்கவில்லை.

Advertisement

மின்சாரம் தாக்கிய நபர்களைக் காப்பாற்ற முயன்றபோது அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டிசாண்டிஸ் (41) மற்றும் அங்கு நீச்சல் குளப் பணியாளராகப் பணியாற்றும் ராகுல் திவாரி (28) ஆகியோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த இருவரும் மணிபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in