LATEST NEWS
“அய்யோ கடவுளே… மொட்டை மாடியில் துணி காயப்போடச் சென்ற பொது நேர்ந்த விபரீதம்..! 11,000 வோல்ட் மின்சாரம் பாய்ந்து கம்பியோடு ஒட்டி 5 நிமிடங்கள் துடிதுடித்த பெண்…லக்னோவை உலுக்கிய நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!”
லக்னோவின் சரோஜினி நகர் பகுதியில், வீட்டின் மொட்டை மாடியில் துணி காயப்போடச் சென்ற 35 வயது பெண் ஒருவர், அங்கிருந்த உயர் மின்னழுத்தக் கம்பி தாக்கியதால் கடுமையான தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 16, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மீரா என்ற அப்பெண் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரின் துப்பட்டா மாடிக்கு அருகே சென்ற 11,000 வோல்ட் மின்சாரக் கம்பியில் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி, ஆடைகளில் இருந்து புகையும் தீயும் கிளம்பிய நிலையில், அவர் சுமார் 5 நிமிடங்கள் மாடியின் விளிம்பில் கம்பியோடு ஒட்டியபடி தொங்கிக் கொண்டிருந்தார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு உடனடியாக உதவிக்கு விரைந்தனர். சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த மீராவின் கணவர் சந்தீப்பும் அங்கு ஓடிவந்தார். மின்சாரத்தைத் துண்டிக்காமல் அவரை மீட்க முயல்வது ஆபத்தானது என்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள், உடனடியாக கஹ்ரு மின் நிலையத்தைத் தொடர்பு கொண்டு அப்பகுதிக்கான மின் விநியோகத்தை நிறுத்தச் செய்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னரே, கம்பியில் சிக்கியிருந்த மீராவை விடுவித்து மாடியில் இருந்து கீழே மீட்டுக்கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்ட மீரா உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சரோஜினி நகர் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, மேல் சிகிச்சைக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடுமையான மின்சாரத் தாக்குதல் மற்றும் பலத்த தீக்காயங்கள் காரணமாக அவரது நிலைமை தற்போதைக்குக் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகில் செல்லும் உயர் மின்னழுத்தக் கம்பிகளால் ஏற்படும் ஆபத்து குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
