CRIME
“இரவு 10.30 அலறிய ஹோட்டல்..” கழிவுத் தொட்டிக்குள் காத்திருந்த எமன்.. அடுத்தடுத்து 4 பேர் துடிதுடித்து மரணம் .. நடந்தது என்ன..? பதறவைக்கும் பின்னணி
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ கங்காவில், கழிவுக் கிடங்கைச் சுத்தம் செய்யச் சென்ற நான்கு ஊழியர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு சுமார் 10:30 மணியளவில், மிட்டாய்கள் மற்றும் உணவுக் கழிவுகள் கொட்டப்படும் தொட்டியைச் சுத்தம் செய்ய முதலில் இரண்டு ஊழியர்கள் உள்ளே சென்று மயங்கி விழுந்தனர். அவர்களைக் காப்பாற்ற அடுத்தடுத்து உள்ளே சென்ற மேலும் இரண்டு தொழிலாளர்களும் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டு உள்ளே சிக்கிய நிலையில், அவர்களை மீட்க முயன்ற மேலும் இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினரும் நிர்வாக அதிகாரிகளும், கதவை உடைக்க கட்டுமான இடத்திலிருந்து வெட்டும் இயந்திரத்தை வரவழைத்து சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நால்வரையும் மீட்டனர். அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஊழியர்களை உள்ளே அனுமதித்தது யார் என்பது குறித்தும், ஹோட்டல் நிர்வாகத்தின் பாதுகாப்பு விதிமுறை மீறல்கள் மற்றும் அலட்சியம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
