VIDEOS
“பிட்னஸ் சீக்ரெட் இதுதான்”… மாஸ் கிளப்பும் Sandy மாஸ்டர்… தீயாய் பரவும் வீடியோ..!!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடந்த இயக்குனர்களில் ஒருவர் தான் சாண்டி மாஸ்டர். இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நடுவராக மாறினார்.
இவர் தண்ணில கண்டம் மற்றும் கெத்து போன்ற திரைப்படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அதே சமயம் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடன இயக்குனராக இவர் பணியாற்றினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் இவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது நேரம், பிரேம், கோல்டு போன்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடன இயக்குனர் சாண்டி ஹீரோவாக நடித்து வருகின்றார். இந்நிலையில் சாண்டி மாஸ்டர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு பல உடற்பயிற்சிகளை செய்யும் வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகிய வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
