நயன்தாராவுக்கு போட்டியாக பாலிவுட்டில் களமிறங்கும் டாப் தமிழ் நடிகை… அலேக்காக தட்டி தூக்கிய அட்லீ… அவர் யார் தெரியுமா..?? – cinefeeds
Connect with us

Uncategorized

நயன்தாராவுக்கு போட்டியாக பாலிவுட்டில் களமிறங்கும் டாப் தமிழ் நடிகை… அலேக்காக தட்டி தூக்கிய அட்லீ… அவர் யார் தெரியுமா..??

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக இன்றும் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்து விட்டார். அதே சமயம் இந்த திரைப்படத்தில் சுமார் 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தென்னிந்திய சினிமா அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நயன்தாராவுக்கு போட்டியாக தற்போது கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கிளாமர் ரூட்டுக்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து ஒரு திரைப்படத்திற்கு மூன்று கோடி சம்பளமாக பெறும் கீர்த்தி சுரேஷ் தற்போது மூன்று மடங்கு அதிகரித்து ஆறு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இயக்குனர் அட்லி ஜவான் திரைப்படத்திற்கு பிறகு வருன் தவானை வைத்து தெறி திரைப்படத்தின் ரீமேக் பாலிவுட்டில் இயக்க உள்ளார் . இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை அவர் பாலிவுட்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் மூலம் தனது சம்பளத்தை நயன்தாராவுக்கு இணையாக கீர்த்தி சுரேஷ் உயர்த்தி விடுவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சமந்தா பாலிவுட் பக்கம் சென்று இருப்பதால் கீர்த்தி சுரேஷ் ஆக்சன் மற்றும் கிளாமர் என்று தன்னை மாற்றவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in