TRENDING
வில்லன் நடிகர் டேனியல் பாலாஜிக்கு விஜய் மற்றும் முரளி இப்படி ஒரு சொந்தமா ? இது தெரியாம போச்சே.!
இது வரை தமிழ் சினிமாவில் நிறைய வில்லன் நடிகர்களை பார்த்துவிட்டோம்.அந்த காலத்து நம்பியார் முதல் ரகுவரன்.பிரகாஷ்ராஜ்.மற்றும் இப்பொழுது மாஸ்டர் திரைபடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி வரை பார்த்துவிட்டோம்.ஒவ்வொருவரும் அவரவர் தனி திறமையால் மக்கள் மனதில் இன்னும் நீங்காத இடம் பிடித்து உள்ளனர்..சினிமைல் திறமை உள்ளவருக்கே வாய்ப்பு என்பது போல் திறமை உள்ளவர்கள் மட்டுமே நிலைத்து நிற்கின்றனர்.
வில்லன் நடிகர்கள் பொதுவாக மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து மக்களிடம் நன்மதிப்பை பெறுகின்றனர்.முன்னாடி காலங்களில் வில்லன் நடிகர்களை கண்டாலே நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் வில்லன் என நினைத்து மக்கள் வெறுத்தனர்,இந்த என்னத்தை பிற்காலங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து மக்களிட தன நல்ல நடிப்பால் நன்மதிப்பை பெற்றுவந்தனர். ஆனால் இப்பொழுது கதையே வேறு,ஒரு திரைபடத்திற்கு வில்லன் தான் கெத்து..
ஒரு திரைபடத்தில் வில்லன் கதா பாத்திரம் சரியாக உருவாக்கவில்லை என்றால் அந்த திரைப்படம் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினம்.உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் தனி ஒருவன்,ராட்சசன் போன்ற படங்களை சொல்லலாம்.
நடிகர் டேனியல் பாலாஜியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பொல்லாதவன் திரைபடத்தில் வில்லானாக நடித்து பிரபலம் அடைந்தார்.பிறகு வட சென்னை போன்ற திரைப்படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து சிறந்த நடிப்பை வெளிபடுத்தினார்.
நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், ” தற்போது நான் வெப்ஸ் சீரியசிலும் நடிக்கிறேன், என்னுடைய அம்மாவும், முரளி உடைய அம்மாவும் அக்கா தங்கைகள். அந்த வகையில் முரளி அவர்கள் எனக்கு அண்ணன், ஒரு நாள் விஜய் அண்ணா நம்ம ரெண்டு பேரும் சொந்தக்காரர்கள் ஆகப் போகிறோம் தெரியுமா என்று கேட்டார். அதற்கு நான் என்ன சொல்றீங்க புரியல அண்ணா என்று கேட்டேன்.
அதற்கு விஜய் அண்ணா ஆமாங்க, உங்க அண்ணன் முரளி பையனும், என் மாமா பொண்ணும் காதலிக்கிறார்கள். தற்போது கல்யாணம் நடக்க போகிறது என்று கூறினார், அப்போதான் எனக்கே தெரியும்” என்று கூறினார். இப்படி இவர் கூறிய வீடியோ சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது
