CINEMA
ஒரே படத்தில் 4 வேடங்களில் அல்லு அர்ஜுன்..? அட்லீயின் அடுத்த அதிரடி ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ – ஆட்டம் காணப்போகும் இந்திய சினிமா..!”
இயக்குனர் அட்லீ மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் முதன்முறையாக இணையும் #AA22 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஏப்ரல் 8, 2026) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட உள்ளது. இன்று வெளியான முன்-அறிவிப்பு போஸ்டரில் ஒரு மர்மமான விலங்கின் கூர்மையான நகங்கள் காட்டப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திரைப்படம் சுமார் ₹800 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஒரு அறிவியல் புனைகதை (Sci-fi) கதையாக உருவாகிறது. இதில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு வளர்ந்து வரும் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஹைலைட்டாக, அல்லு அர்ஜுன் இதுவரை பார்த்திராத பல மாறுபட்ட தோற்றங்களில் நடிக்கவுள்ளார். குறிப்பாக, ஒரே குடும்பப் பின்னணியைச் சேர்ந்த நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் அவர் தோன்ற வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் படம் என்பதால், இந்திய திரையுலகமே இந்த ‘மேக்னம் ஓபஸ்’ படைப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறது.
