CINEMA
விஜய் தேவரகொண்டா சொன்ன அந்த ‘ஒரே வார்த்தை’…! பொது மேடையில் கண் கலங்கிய ராஷ்மிகா மந்தனா… என்னவா இருக்கும்..?
தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்குத் திருமணமாகி இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. நீண்ட நாள் காதலுக்குப் பிறகு அண்மையில் இல்லற வாழ்வில் இணைந்த இவர்கள், தற்போது தத்தமது திரைப்படப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா, தனது மனைவி ராஷ்மிகா குறித்து மிகவும் பெருமிதமாகப் பேசினார். தன்னைச் சுற்றி எத்தனை எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் தனது கடமையில் ராஷ்மிகா உறுதியாக இருப்பார் என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
விஜய் தேவரகொண்டா மேலும் பேசுகையில், ராஷ்மிகா எப்போதும் மற்றவர்களிடம் அன்பையும் கருணையையும் காட்டும் குணம் கொண்டவர் என்றும், எவ்விதச் சூழலிலும் தனது நேர்மையை விட்டுக்கொடுக்காதவர் என்றும் புகழாரம் சூட்டினார். குறிப்பாக, “என்னை மாற்ற முயற்சிக்காத அற்புதமான பெண் அவர்” என்று விஜய் கூறியதைக் கேட்டு, மேடையிலேயே ராஷ்மிகா உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இந்தத் தம்பதிகளின் பரஸ்பர அன்பும், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பாராட்டும் விதமும் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
