ரஜினி பட விவகாரத்தில் கமலின் ‘கறார்’ பாலிசி…! அடுத்தடுத்து விலகும் இயக்குனர்களால் பரபரப்பு… காரணம் இதுதானா…? – cinefeeds
Connect with us

CINEMA

ரஜினி பட விவகாரத்தில் கமலின் ‘கறார்’ பாலிசி…! அடுத்தடுத்து விலகும் இயக்குனர்களால் பரபரப்பு… காரணம் இதுதானா…?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் ‘தலைவர் 173’ திரைப்படம் ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இப்படத்தின் இயக்குனர் தேர்வில் மட்டும் இன்னும் ஒரு தெளிவான முடிவு எட்டப்படவில்லை. முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்து விலகிய நிலையில், அடுத்து இளம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் பெயரும் அடிபட்டது. இப்போது அவரும் இந்தப் படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அஸ்வந்த் மாரிமுத்து இப்படத்தை இயக்கலாம் எனப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஒரே படத்திற்குத் தொடர்ந்து இயக்குனர்கள் மாற்றப்படுவது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தப் பின்னடைவுக்குத் தயாரிப்பாளர் கமல்ஹாசன் விதிக்கும் கடுமையான நிபந்தனைகளே காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. கமலின் தலையீடு மற்றும் கண்டிஷன்களால் இயக்குனர்கள் தயங்குவதாகத் திரையுலகினர் பேசிக்கொள்கின்றனர். இருப்பினும், இது குறித்துப் படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ரஜினி-கமல் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் இயக்குனர் நாற்காலியில் இறுதியில் யார் அமரப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in