CINEMA
அடேங்கப்பா..! தனுஷுடன் ஜோடி சேர மமிதா பைஜு வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..? வாயடைத்து போன ரசிகர்கள்..!!
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை மமிதா பைஜு, தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். ‘போர் தொழில்’ பட புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கர’ (Kara) திரைப்படத்தில் மமிதா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் அவர் ஒரு கிராமத்து பெண்ணாக, இதுவரை பார்த்திராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் வெற்றிகளைத் தந்து வரும் மமிதா பைஜு, ‘கர’ திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க சுமார் 2 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. முன்னதாக இவரது சம்பளம் 15 கோடி ரூபாய் என வதந்திகள் பரவிய நிலையில், அதனை அவர் மறுத்திருந்தார். தற்போது தமிழின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதால் தனது சம்பளத்தை அவர் கணிசமாக உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
படப்பிடிப்பு அனுபவம் குறித்துப் பகிர்ந்த மமிதா, தனுஷின் அர்ப்பணிப்பைப் பார்த்து தான் வியந்து போனதாகக் கூறியுள்ளார். “நாள் முழுவதும் வேலை செய்தாலும் சோர்வடையாத தனுஷிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்” என்றும், ஒரு காட்சியில் அவரது நடிப்பைப் பார்த்து மெய்மறந்து நின்றதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மமிதாவின் இந்த வைரல் பேச்சும், சம்பளம் குறித்த தகவலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
