CINEMA
ஒரே ஒரு நாள் தாமதம்.. ஆனால் 3 நாளில் அசுர வேட்டை…! ‘கருப்பு’ படத்தின் நிஜ வசூல் எவ்ளோ தெரியுமா…!கங்குவா தோல்விக்கு சூர்யாவின் பதிலடி…!
நடிகர் சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவான ‘கருப்பு‘ திரைப்படம் கடந்த மே 15ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியானது. நிதி நெருக்கடி காரணமாக திட்டமிட்ட தேதியான மே 14ஆம் தேதியிலிருந்து ஒரு நாள் தாமதமாக வெளியான போதிலும், ரசிகர்களிடையே இருந்த இரண்டு ஆண்டு கால எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளது. கிராம எல்லைத் தெய்வமான கருப்பசாமியை மையமாகக் கொண்டு பக்தி மற்றும் ஆக்ஷன் கலந்த கதைகளமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், தியேட்டர்களில் ரசிகர்களைப் பரவசமடையச் செய்துள்ளதுடன், சூர்யாவிற்கு ஒரு பிரம்மாண்டமான கம்பேக் படமாகவும் அமைந்துள்ளது.
திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடையே கிடைத்த அமோகமான நேர்மறை விமர்சனங்கள் காரணமாக, இப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. வார இறுதி நாட்களிலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ள ‘கருப்பு’, வெளியான மூன்றே நாட்களில் உலகளவில் ரூ. 147 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. படத்தின் இந்த அதிகாரப்பூர்வ வசூல் விபரத்தைத் தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளது. படம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், வரும் நாட்களிலும் இதன் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மைக்காலமாக சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ மற்றும் ‘ரெட்ரோ’ போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் இந்த அசுரத்தனமான வெற்றி சூர்யா ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கண்ணுகளா… செல்லங்களா… என் சாமிகளா உங்களால் தான் இந்த வெற்றி” என உணர்ச்சிப்பொங்கப் பேசி தனது அன்பையும் நன்றியையும் ரசிகர்களுக்குக் காணிக்கையாக்கியுள்ளார்.
