CINEMA
இந்தியாவிலேயே டாப் 10 ஹீரோ, ஹீரோயின்களில்…. அந்த நடிகை தான் Best…. RJ பாலாஜி ஓபன் டாக்…!!!

80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஊர்வசி குழந்தை நட்சத்திரமாக ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.தமிழில் கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.முக்கியமாக நடிகை ஊர்வசி அபூர்வ சகோதரிகள், கொம்பேறி மூக்கன், ஓ மானே மானே, அன்பே ஓடிவா என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார்.
உலகநாயகன் கமலுடன் மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், பஞ்சதந்திரம் மன்மதன்பு உள்ளிட்ட படங்களில் ஊர்வசி நடித்துள்ளார். ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் பொன்னர் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஆர்.ஜே பாலாஜி, இந்தியாவுல ரொம்ப முக்கியமான நடிகை ஊர்வசி தான். இந்தியாவில் டாப் 10 சிறந்த நடிகர், நடிகைகளில் ஊர்வசி தான் Best என்று கூறியுள்ளார்.