தெலுங்கு ரீமிக்ஸ் …!தேர்தலுக்கு முன் சீண்ட ஆள் இல்லை…! முதலமைச்சர் ஆனதும் எகிறிய மவுசு…! விஜய்யின் ‘ஜனநாயகன்’ வசூல் வேட்டை…! – cinefeeds
Connect with us

CINEMA

தெலுங்கு ரீமிக்ஸ் …!தேர்தலுக்கு முன் சீண்ட ஆள் இல்லை…! முதலமைச்சர் ஆனதும் எகிறிய மவுசு…! விஜய்யின் ‘ஜனநாயகன்’ வசூல் வேட்டை…!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், அவர் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தற்போது புதிய மவுசு கூடியுள்ளது. பல்வேறு அரசியல் தடைகளுக்குப் பிறகு விரைவில் திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படம், தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது கோலிவுட் அறிந்ததே. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அரசியல் நெருக்கடிகள் காரணமாக இப்படத்தை வாங்க எந்தவொரு பெரிய விநியோகஸ்தரும் முன்வராத நிலையில், தற்போது விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த பிறகு இப்படத்தின் வியாபாரம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் பயங்கர சூடு பிடித்துள்ளது.

இத்திரைப்படம் ஒரு தெலுங்குப் படத்தின் ரீமேக் என்றபோதிலும், தமிழக முதலமைச்சராக மாறியுள்ள விஜய்யின் தற்போதைய அரசியல் அந்தஸ்து மற்றும் பிரம்மாண்ட இமேஜ் காரணமாக, இப்படத்தின் தெலுங்கு டப்பிங் மற்றும் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்ற அண்டர் கிரவுண்டில் பலத்த போட்டி நிலவி வருகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் படத்தின் தயாரிப்பாளர், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் ரிலீஸ் உரிமையை  சுமார் 35 கோடி ரூபாய்க்கு விற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அதற்கான ஆரம்பகட்ட வியாபாரப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளார்.

Advertisement

இருப்பினும், ஏற்கனவே தெலுங்கில் வெளியான ஒரு ரீமேக் படத்திற்கு இந்தத் தொகை மிகவும் அதிகம் என்று கருதும் தெலுங்கு விநியோகஸ்தர்கள் தரப்பு, அதிகபட்சமாக 15 கோடி ரூபாய் மட்டுமே தர முடியும் எனத் தயாரிப்பாளரிடம் கறாராகத் தெரிவித்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரு தரப்பிற்கும் இடையே இழுபறி நீடித்து வரும் சூழலில், இறுதிக்கட்டப் பேச்சுவார்த்த சமரசமாக முடிந்து, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமை அதிகபட்சமாக 20 கோடி ரூபாய் வரை விலை போக வாய்ப்பிருப்பதாகத் திரை உலக வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். எது எப்படியோ, தேர்தலுக்கு முன் முடங்கிய படம், தற்போது முதலமைச்சர் விஜய்யின் மாஸ் காரணமாய் காசு மழையைக் கொட்டத் தொடங்கியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in