CINEMA
“அவர் என்னை ஒருநாளும்…!விவாகரத்துக்குப் பின் புதிய வாழ்க்கை…!கணவர் ராஜ் நிடிமோரு குறித்து முதல்முறையாக ஓப்பனாக பேசிய சமந்தா…!மா இன்டி பங்காரம்’ டிரெய்லரில் சமந்தா காட்டிய வெறித்தனம்…!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியீட்டு விழா, ஹைதராபாத்தில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, பிரபல இயக்குநரான ராஜ் நிடிமோருவைச் சமந்தா காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதி இணைந்து தயாரித்துள்ள முதல் திரைப்படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ராஜ் நிடிமோரு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.
இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சமந்தா, தனது கணவர் ராஜ் நிடிமோரு குறித்து முதல்முறையாக மேடையில் ஓப்பனாகப் பேசினார். அப்போது தொகுப்பாளர், ‘ராஜ் நிடிமோரு உங்களை எப்போதாவது சங்கடப்படுத்தி இருக்கிறாரா?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சமந்தா, “அப்படியெல்லாம் எதுவும் இல்லை, அவர் என்னை ஒருபோதும் எரிச்சலடைய (இரிடேட்) செய்தது இல்லை; அவர் ஒரு பெர்ஃபெக்ட்டான மனிதர்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், “இயக்குநர் நந்தினி ரெட்டியும் பெர்ஃபெக்ட் தான், ஆனால் அவர் என்னை இரிடேட் செய்வது புதிதல்ல, கடந்த 15 வருடங்களாக அதை நான் சகித்து வருகிறேன்” என்று ஜாலியாகக் குறிப்பிட்டார். விழாவின் இடையே ரசிகர் ஒருவர் சமந்தாவிற்குப் பூ கொடுத்து ப்ரபோஸ் செய்தது அங்கிருந்தவர்களைக் கவர்ந்தது.
தொடர்ந்து படம் குறித்துப் பேசிய சமந்தா, “‘மா இன்டி பங்காரம்’ டிரெய்லர் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். ஆக்ஷன், டிராமா, காமெடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. எங்களுக்காக இங்கு வந்திருக்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். வருகிற ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படம், ரசிகர்கள் அனைவரும் பெருமைப்படும் வகையில் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தற்போது வெளியாகியுள்ள ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் டிரெய்லர் சமந்தாவின் அடுத்த லெவல் நடிப்பை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. ஒரு கூட்டுக் குடும்பத்திற்கு மருமகளாக வரும் சமந்தா, அங்குள்ள பழக்கவழக்கங்கள் தெரியாமல் திணறுவதும், பின்னர் தனது குடும்பத்தைக் காக்க ஒரு மாஸ் ஹீரோ போல ஆக்ஷனில் இறங்கிப் போரிடுவதுமாக டிரெய்லர் அதிரடியாக நகர்கிறது. “என் உயிரைக் கொடுத்தாவது என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்” என்று சமந்தா பேசும் பன்ச் வசனங்களும், அவரது மிரட்டலான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களுக்குச் செம மாஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
