CINEMA
என் அம்மா அப்படி சொன்னாங்க…. தாயின் வெள்ளந்தி மனசு குறித்து சூரி நெகிழ்ச்சி…!!
நடிகர் சூரி, அண்ணா பென் உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் இவர்கள் நடித்த கதாபாத்திரமான பாண்டி மற்றும் மீனா பற்றிய பதிவுகள் சில நாட்களுக்கு முன்பாக இணையத்தில் பதிவிட்டனர். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முடிவடைந்து படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சூரி, கொட்டு காளி படத்திற்கு விருது வாங்குவதற்காக பெர்லினுக்கு போனேன்.
எங்க அம்மா கால் பண்ணி எங்கப்பா இருக்குன்னு கேட்டாங்க. நான் பெர்லின்ல இருக்கேன்னு சொன்னேன். அவன் யாருன்னு கேட்டாங்.க அது வெளிநாடு வான்னு சொன்னேன். வரும்போது என்ன வேணும்னு கேட்டா கோடாளி தைலமும், டார்ச் லைட்டம் வாங்கிட்டு வர சொன்னாங்க என்று தெரிவித்துள்ளார்.