விஜய் சிஎம்-ஆனதை ஏற்கவில்லையா தனுஷ் தந்தை…”எனக்கு பழைய இளைய தளபதி தான் …என் மகன்களோ, பேரன்களோ அரசியலுக்கு வரலாம்…போயஸ் கார்டன் பவரை ஓரங்கட்டிய கஸ்தூரி ராஜாவின் அரசியல் வெடிகுண்டு…! – cinefeeds
Connect with us

CINEMA

விஜய் சிஎம்-ஆனதை ஏற்கவில்லையா தனுஷ் தந்தை…”எனக்கு பழைய இளைய தளபதி தான் …என் மகன்களோ, பேரன்களோ அரசியலுக்கு வரலாம்…போயஸ் கார்டன் பவரை ஓரங்கட்டிய கஸ்தூரி ராஜாவின் அரசியல் வெடிகுண்டு…!

Published

on

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி, தற்போதைய முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். ஆரம்பத்தில் திமுாக, அதிமுக உள்ளிட்ட முன்னணி கட்சிகள் இவரை சாதாரணமாக மதிப்பிட்ட போதிலும், தேர்தலில் தனித்து நின்று ஒட்டுமொத்த வாக்கு வங்கிகளையும் தலைகீழாக மாற்றி ஆட்சியைப் பிடித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றிக்குப் பிறகு, எதிர்முகாமில் இருந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அமைச்சரவையிலும் அவர்களுக்குப் பங்களித்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் விஜய். எம்ஜிஆர் அலையை விடவும் விஜய்யின் அரசியல் அலை தமிழகத்தில் தீவிரமாக இருந்ததாக சீனியர் நடிகர்கள் பலரும் வியந்து பாராட்டும் நிலையில், இன்னும் 15 ஆண்டுகளுக்கு அவரே தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீடிப்பார் என்ற கணக்குகளும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

விஜய்யின் இந்த அரசியல் மாற்றத்தை சிவக்குமார், குஷ்பூ உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் வரவேற்று, மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில், நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியின் போது தொகுப்பாளினி, “போயஸ் கார்டன் தான் தமிழ்நாட்டின் பவர்ஃபுல்லான இடம்” என்று சுட்டிக்காட்டினார். அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த கஸ்தூரி ராஜா, “போயஸ் கார்டன் இல்லை, எப்போதுமே தமிழ்நாட்டின் பவர்ஃபுல் இடம் கோபாலபுரம்தான்; அங்கேதான் ஒளி பிறந்தது” என திமுகவின் கோட்டையைக் குறிப்பிட்டு அதிரடியாகப் பேசினார்.

Advertisement

மேலும் அருகில் இருந்தவர்களிடம், “இப்போ போயஸ் கார்டனுக்கு ‘இளைய தளபதி’ வந்துவிட்டார் போலயே… ஓ, வரப்போகிறாரா? வரட்டும் வரட்டும், நன்றாக இருந்தால் சரிதான்” என்று விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கருத்து தெரிவித்தார். அத்துடன், தனது மகன்களோ அல்லது பேரன்களோ கூட எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் ஒரு போடு போட்டார். தமிழக மக்கள் அனைவரும் விஜய்யை ‘தளபதி’ என்றும், முதலமைச்சர் என்றும் கொண்டாடி வரும் வேளையில், கஸ்தூரி ராஜா மட்டும் இன்னும் அவரை பழைய பட்டமான ‘இளைய தளபதி’ என்றே குறிப்பிட்டுக் பேசியது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களை ரசிகர்கள் தற்போது தீவிரமாகப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in