“அரசியலில் பிரிந்து போவது புதுசல்ல… தி.மு.க எதற்கும் கவலைப்படாது…” கம்யூனிஸ்ட் கட்சியின் விலகல் குறித்து ஆர்.எஸ். பாரதி ஆவேசப் பேச்சு….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அரசியலில் பிரிந்து போவது புதுசல்ல… தி.மு.க எதற்கும் கவலைப்படாது…” கம்யூனிஸ்ட் கட்சியின் விலகல் குறித்து ஆர்.எஸ். பாரதி ஆவேசப் பேச்சு….!!

Published

on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தங்களது கூட்டணியில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்தது குறித்துப் பேசினார்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தி.மு.க-வுடன் கைகோர்த்துப் பயணித்த கம்யூனிஸ்ட் தோழர்களுக்குத் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அரசியலில் நட்பு பாராட்டுவதும் பின்னர் பிரிந்து செல்வதும் வாடிக்கையான ஒன்றுதான் என்றார். கம்யூனிஸ்ட் கட்சியினரின் இந்த தற்போதைய விலகல் ஒரு தற்காலிகமான சூழலே தவிர, அது நிரந்தரமான முடிவு அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

Advertisement

மேலும் கூட்டணி விவகாரம் குறித்துப் பேசிய ஆர்.எஸ். பாரதி, தோழமைக் கட்சிகள் தங்களோடு இணைந்து நின்றால் வரவேற்போம் என்றும், விலகி நின்றால் தனித்துப் போட்டியிடுவோம் என்றும், ஒருவேளை தங்களை எதிர்த்துக் களம் கண்டால் அவர்களையும் எதிர்த்துப் போரிடத் தி.மு.க தயாராக உள்ளது என்றும் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்களுக்கு எவ்விதக் கவலையும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், தி.மு.க-விற்கு என்று தனித்துவமான வாக்கு வங்கியும் பெரும் பலமும் இருப்பதாகக் கூறினார். தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டாலும், பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி தி.மு.க மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறும் என அவர் அதிரடியாகக் கூறினார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in