அரசுப் பள்ளியில் அமைச்சரின் குத்தாட்டம்…! “கல்விக்கூடங்களைச் சினிமா மேடையாக்காதீர்…” புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேச அறிக்கை….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அரசுப் பள்ளியில் அமைச்சரின் குத்தாட்டம்…! “கல்விக்கூடங்களைச் சினிமா மேடையாக்காதீர்…” புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேச அறிக்கை….!!

Published

on

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிலையங்களை அரசியல் மற்றும் சினிமா மேடைகளாக்கக் கூடாது எனப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 21-ஆம் தேதி மேலூர் அரசுப் பள்ளியில் நடந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சினிமா பாடலுக்குக் குத்தாட்டம் போட்டதையும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் த.வெ.க கட்சியின் பிரச்சாரப் பாடல் ஒலிக்கப்பட்டதையும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், த.வெ.க நிர்வாகி ஒருவர் பள்ளி வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களைக் கட்சியின் பெயரைச் சொல்லக் கூறி ரீல்ஸ் வீடியோ எடுத்த சம்பவத்தையும் அவர் கவலையோடு நினைவு கூர்ந்துள்ளார். கோவில் திருவிழாக்களிலேயே சினிமா பாடல்களுக்குத் தடை விதிக்கப்படும் போது, பிஞ்சு உள்ளங்கள் பயிலும் கல்விக்கூட விழாக்கள் மற்றும் பட்டமளிப்பு விழாக்களில் இத்தகைய செயல்களை அனுமதிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல என்று அவர் சாடியுள்ளார்.

Advertisement

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சில அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தகுதியையும் பொறுப்பையும் உணராமல் சினிமா மோகத்திலும், குத்தாட்டங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். உண்மையான மதச்சார்பற்ற அரசு என்பது அரசியல், சினிமா, ஆபாசம் மற்றும் போதையற்ற நிர்வாகத்தையே குறிக்கும் என்பதால், கல்வி நிறுவனங்களில் அரசியல் பேசுவதையும் சினிமாவைக் காட்சிப்படுத்துவதையும் தடை செய்யத் தமிழக அரசு உடனடியாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in