அப்போ அந்தப் பேச்சு உண்மைதானா?…மோடி, ஸ்டாலின் வாழ்த்தியும் ரஜினி ஏன் மௌனம்?…விஜய் – ரஜினி பனிப்போர் உச்சகட்டம்…வாழ்த்து சொல்லாததன் பின்னணியில் இருக்கும் அந்த ரகசியம் என்ன?… – cinefeeds
Connect with us

CINEMA

அப்போ அந்தப் பேச்சு உண்மைதானா?…மோடி, ஸ்டாலின் வாழ்த்தியும் ரஜினி ஏன் மௌனம்?…விஜய் – ரஜினி பனிப்போர் உச்சகட்டம்…வாழ்த்து சொல்லாததன் பின்னணியில் இருக்கும் அந்த ரகசியம் என்ன?…

Published

on

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான விஜய் இன்று (ஜூன் 22) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவர் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் என எட்டுத்திக்கும் இருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் மற்றும் மலையாள திரையுலகின் ஜாம்பவான் மோகன்லால் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் முதலமைச்சர் விஜய்க்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த ஒட்டுமொத்த வாழ்த்து மழையிலும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் இதுவரை வாழ்த்து தெரிவிக்காதது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. திரைத்துறையில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் இடையே சம்பளம், வசூல் சாதனை மற்றும் முதல் நாள் ஓப்பனிங் என பல விஷயங்களில் நீண்டகாலமாகவே கடுமையான போட்டி நிலவி வருவதாகக் கூறப்பட்டு வந்தது. வழக்கமாகவே விஜய்யின் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிப்பதில்லை என்றாலும், விஜய் தற்போது மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் நிலையிலும் ரஜினி அமைதி காப்பது நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Advertisement

முன்னாள் முதலமைச்சர்களே தங்களது அரசியல் எல்லைகளைத் தாண்டி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், ரஜினிகாந்தின் இந்த மௌனம் இருவருக்கும் இடையே நிலவி வரும் பனிப்போரை உறுதிப்படுத்துவது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் திரை உலகினர் பலரும் ஸ்பெஷல் வீடியோக்களை வெளியிட்டு முதலமைச்சரின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் வேளையில், சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து வராதது குறித்த விவாதங்கள் கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in