CINEMA
இவன் கூட எல்லாம் நடிச்சா இமேஜ் கெட்டுடும்ன்னு சொன்னாங்க, அந்த 3 ஹீரோயின்களும் என்கூட நடிக்க மாட்டேன்னுட்டாங்க – கேப்டன் விஜயகாந்த் ஓபனாக சொன்ன அந்த 3 பேர் அவங்களா? என்ன கொடும சார் இது?
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகை பேட்டி ஒன்றில் நடிகர் விஜயகாந்த் கூறியதாவது, பார்வையின் மறுபக்கம் படம் ஊட்டியில் ஷூட்டிங். எனக்கு ஜோடி ஸ்ரீப்ரியா. ஊட்டி போய்க் காத்துக் கிடந்தோம். அவங்க வரவே இல்லை. விசாரிச்சால் என்னோடு எல்லாம் அவங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். இதை அவங்ககிட்டேயே கேட்டேன். அதே மாதிரி சரிதாவும் என்னோட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்குக் காரணமே புரியலை. நான் அவங்ககூட நடிக்க விரும்பலைன்னு சொன்னதாக யாரோ சரிதாகிட்டே சொன்னாங்களாம். இந்த மாதிரி பிரச்னைகளை வளர விடக்கூடாதுன்னு முடிவு பண்ணி நானே நேரா சரிதா வீட்டுக்குப் போனேன். அவங்க அம்மாவும் தங்கையும் இருந்தாங்க.
பாருங்க, நான் உங்க பொண்ணுகூட நடிக்கமாட்டேன்னு சொல்லலை. யாராவது சொன்னதை நம்பாதீங்க. உங்க பொண்ணுகூட நடிச்சா தான் எனக்கு வாழ்க்கைங்கறதுக்காக நான் நேரா உங்க வீட்டுக்கே வந்து கேட்கிறேன்னு தப்பா நினைக்க வேண்டாம். கலைஞர்களுக்குள்ள உட்பூசல் இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் வந்தேன்னு பளிச்சுனு சொல்லிட்டு வந்துட்டேன். அதே மாதிரிதான் ராதிகாவும் என்னோட நடிக்க விருப்பப்படலை. இன்னிக்கு இவங்க எல்லாம் என்னோட நடிக்கிறாங்க.
அதுக்குப் பிறகு ராதிகாவும் நானும் நிறைய படங்கள்ல நடிச்சோம், நடிச்சிக்கிட்டிருக்கோம். ஆரம்பத்தில் இவங்க, நடிக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாங்கன்னு சொல்றதை விட, என் பக்கம் திரும்பாம ஒதுங்கிக்கிட்டாங்க என்பதுதான் உண்மை.தப்பு அவங்க பேர்ல இல்லை. இவங்களுக்குப் பின்னால் பெரிய சக்திகள் இயங்கிக்கிட்டிருந்தது. இவனோடு எல்லாம் நடிச்சா உங்க இமேஜ் கெட்டுடும் என்கிற பயமுறுத்தல் அவங்களுக்கு நிறைய இருந்தது என்று விஜயகாந்த் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
