அடிக்கடி காதுகளை குடையும் பழக்கம் உள்ளவரா நீங்க? ரொம்ப சீக்கிரமே மத்தவங்க பேசறது உங்களுக்கு கேட்காம போயிடும் – இந்த விஷயங்களை முதலில் காது கொடுத்து கேளுங்க! – cinefeeds
Connect with us

LifeStyle

அடிக்கடி காதுகளை குடையும் பழக்கம் உள்ளவரா நீங்க? ரொம்ப சீக்கிரமே மத்தவங்க பேசறது உங்களுக்கு கேட்காம போயிடும் – இந்த விஷயங்களை முதலில் காது கொடுத்து கேளுங்க!

Published

on

Ear

நம்மில் பல பேருக்கு காது குடையும் பழக்கம் இருக்கிறது. அடிக்கடி காதுகளை பட்ஸ் சிறுகுச்சி போன்ற ஏதேனும் ஒரு பொருளால் காதுகளை குடைந்து கொண்டே இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் கோழி இறகு போன்றவற்றால் காதுகளுக்குள் குடைந்து அதில் தனி சுகம் காண்பார்கள்.

நமது உடலில் உள்ள உறுப்புகளில் மிக முக்கியமானது காதுகள். காதுகளின் கேட்கும் திறன்தான் நாம் பிறர் பேசுவதை அறிய உதவுகிறது. மற்ற ஒலிகளை தெரிந்துக்கொள்ள முடிகிறது. அதனால் காதுகளை நன்றாக பராமரிக்க வேண்டும். அடிக்கடி காதுகளை குடையக் கூடாது.

Advertisement

காதுகளை குடைய பஞ்சினால் ஆன குச்சிகள் (பட்ஸ்) சாவியை பயன்படுத்த கூடாது. காதுகளை சுத்தம் செய்ய காதுகளில் எண்ணெய் போன்றவைகளை பயன்படுத்தக் கூடாது. காதுக்குள் இயல்பாகவே சுரக்கும் திரவமே காதுகளை பாதுகாக்கின்றன. டாக்டர்களை தவிர வேறு யாரும் காதுகளை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

காது கேட்கும் திறன் பரிசோதனை பல மருத்துவமனைகளில் உள்ளன. அங்கு சென்று உங்கள் காதுகளின் கேட்கும் திறனை பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளலாம். காதுகளை அடிக்கடி குடைவதால் காதுக்குள் உள்ள நுண்ணிய உறுப்புக்கள் சேதம் அடைந்து நாளடைவில் காதுகள் கேட்கும் திறனை இழந்து விடும். அதனால் கண்டிப்பாக காதுகளை குடையும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று காது மூக்கு தொண்டை சிகிச்சை டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in