மகளின் படிப்புக்காக வளையல்களை விற்ற தாய்…! இன்று அதே மகள் கொடுத்த இன்ப அதிர்ச்சி…! இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகளின் படிப்புக்காக வளையல்களை விற்ற தாய்…! இன்று அதே மகள் கொடுத்த இன்ப அதிர்ச்சி…! இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!!

Published

on

பெங்களூரைச் சேர்ந்த அனுஸ்மிதா என்ற இளம் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உருக்கமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுஸ்மிதா கல்லூரியில் சேரும் போது அவதிப்பட்ட குடும்ப சூழ்நிலையால், அவரது கல்லூரிப் படிப்பிற்கான கட்டணத்தைச் செலுத்தப் போதிய பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த இக்கட்டான சமயத்தில், அவரது தாய் சிறிதும் யோசிக்காமல் தனது தங்கக் வளையல்களை அடகு வைத்து மகளின் கல்விக்காகப் பணம் கொடுத்துள்ளார். தனது தாயின் இந்த பெரும் தியாகமே தனது வளர்ச்சிக்கு அடித்தளம் என்று அனுஸ்மிதா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பல வருடக் கடின உழைப்பிற்குப் பிறகு, அனுஸ்மிதாவிற்கு இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில்  வேலை கிடைத்துள்ளது. தனக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியான செய்தியைத் தாயிடம் பகிர்ந்து, இருவரும் உணர்ச்சிவசப்பட்டு கட்டிப்பிடித்து அழுத தருணம் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும், “தனது படிப்புக்காகத் தாய் வளையல்களை அடகு வைத்தாரோ, இன்று அதே பெண் தனது தாய்க்கு உலகின் அனைத்து மகிழ்ச்சியையும் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு ஒரு நல்ல வேலையைப் பெற்றுவிட்டாள்” என்ற வாசகமும் அந்த வீடியோவில் பகிரப்பட்டுள்ளது.

Advertisement

https://www.instagram.com/reel/DaH47svxQn7/?utm_source=ig_embed&ig_rid=Adrk7h1A0CzwUEqx1-cMTkG

 தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. பிளிப்கார்ட்டில் கிடைத்த இந்த வேலை வெறும் தொழில்முறை வெற்றி மட்டுமல்ல, அது தனது தாயின் தியாகத்திற்குத் தான் செய்த மரியாதை என்று அனுஸ்மிதா கூறியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ஆயிரக்கணக்கான இணையவாசிகள் தாய்-மகள் இடையே உள்ள இந்த தூய்மையான பாசப் பிணைப்பைப் பாராட்டியும், பிள்ளைகளின் கனவுகளுக்காகப் பெற்றோர் படும் கஷ்டங்களை நினைவுகூர்ந்தும் தங்களது வாழ்த்துகளையும் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in