குஷியோ குஷி..! பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி..! பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு…!!

Published

on

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, வரும் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு முதலே தொடங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தவும், இடைநிற்றலைக் குறைக்கவும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நகர்ப்புறப் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கூடுதலாக மினி பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்றும், மழைக்கால பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு முறையான நீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இம்மாநாட்டில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட 43 முக்கிய நிர்வாகக் கோரிக்கைகளும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in