LATEST NEWS
அதிமுகவிற்கு மெகா ஷாக்..! விஜய் கட்சிக்கு தாவும் 5 முன்னாள் அமைச்சர்கள், 15 MLA-க்கள்… பின்னணியில் நடந்தது என்ன..? திணறும் எடப்பாடி..!!
அதிமுகவிலிருந்து விலகிய 5 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 15 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துப் பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தவெகவில் இணைவதற்காக அதிமுக தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் வரவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் இந்தத் தொடர் சரிவு மற்றும் மூத்த தலைவர்களின் வெளியேற்றம், அதிமுகவின் மீது அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எவ்வளவு அதிருப்தியில் உள்ளார்கள் என்பதைப் பிரதிபலிப்பதாக சி.விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து விலகி, மாற்று அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தவெகவை நோக்கி முக்கியத் தலைவர்கள் கொத்து கொத்தாகப் படையெடுப்பது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
