CINEMA
கல்லை எடுத்து அவன் தலையிலேயே அடித்தேன்… ரத்தம் கொட்டியது..! உண்மை சம்பவத்தை உடைத்த நடிகை கயாடு லோஹர்.. ரசிகர்கள் ஷாக்..!
தென்னிந்தியத் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கயாடு லோஹர். இவர் நடிப்பில் ‘இதயம் முரளி’, ‘இம்மோர்ட்டால்’, ‘தி பாரடைஸ்’, ‘மஞ்சணத்தி’, ‘சூர்யா 48’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் கைவசம் உள்ளன. இதில் இவரது அடுத்த வெளியீடான ‘இதயம் முரளி’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பரப் பேட்டி ஒன்றில் தனது பள்ளிப் பருவத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
கயாடு லோஹர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, தனது வீட்டிற்கு அருகில் உள்ள டியூஷன் வகுப்புகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பையன் அவரைத் தொடர்ந்து ‘ஈவ்டீசிங்’ செய்து தொல்லை கொடுத்துள்ளான். முதல் இரு நாட்கள் சரி போகட்டும் என்று பொறுமையாகக் கடந்து சென்றபோதிலும், மூன்றாவது நாளும் அவன் எல்லை மீறி அநாகரிகமாக நடந்துகொண்டதால் நடிகைக்குக் கடுமையான கோபம் ஏற்பட்டுள்ளது.
கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற கயாடு, அங்கிருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அந்தப் பையனின் தலையிலேயே பலமாக வீசியுள்ளார். இதில் அவனது தலை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது; உடனே அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். பார்ப்பதற்குத் தான் மிகவும் சாதுவாகவும், அமைதியாகவும் தெரிந்தாலும், பெண்கள் தங்களுக்கு யாராவது தப்பு அல்லது அநீதி இழைத்தால் அமைதியாக இருக்கக் கூடாது என்றும், கண்டிப்பாகத் திருப்பி அடிக்க வேண்டும் என்றும் இப்பேட்டியில் அவர் தைரியமாகத் தெரிவித்துள்ளார்.
