LATEST NEWS
கையில் செருப்புடன் ஆக்ரோஷ வீடியோ…! அதிர்ந்த இன்ஸ்டாகிராம்…! நாஞ்சில் விஜயன் ஆதரவாளர்களுக்கு செருப்பை காட்டி எச்சரித்த விஜே வைஷ்ணவி..!!!
சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயனுக்கும், திருநங்கை விஜே வைஷ்ணவிக்கும் இடையே கடந்த பல வருடங்களாகவே தொடர் பிரச்சனைகள் இருந்து வருகின்றன. நாஞ்சில் விஜயன் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, தனது பணத்தையும் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக வைஷ்ணவி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், விஜே வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் செருப்புடன் இருக்கும் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “இந்த செருப்பு நாஞ்சில் விஜயனுக்கானது” என்று குறிப்பிட்டு, நாஞ்சில் விஜயனின் ஆதரவாளர்கள் தனது சமூக வலைத்தள கமெண்ட் பக்கத்தில் வந்து தொடர்ந்து மிக மோசமாக அசிங்கமான கருத்துகளைப் பதிவிட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
https://www.instagram.com/reel/DaKjdYlJ7FW/?utm_source=ig_web_button_share_sheet
மேலும் பேசிய அவர், தனக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் இடையே நடக்கும் விஷயங்கள் தங்களுக்குள் மட்டுமே தெரியும் என்றும், அதைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வோம் என்றும் கூறியுள்ளார். நாஞ்சில் விஜயனைப் போலவே தனக்கும் குடும்பம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தன்னைப்பற்றி தொடர்ந்து அவதூறாகப் பேசும் நபர்களை இனிமேல் செருப்பால் அடிப்பேன் என்றும், தான் ஒருவேளை இறந்து போனால் கூட அதற்கு நாஞ்சில் விஜயன் தான் ஜெயிலுக்குப் போவார் என்றும் ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார்.
