BREAKING : தமிழ்நாட்டுக்கு இடைத்தேர்தல் இல்லை.. தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING : தமிழ்நாட்டுக்கு இடைத்தேர்தல் இல்லை.. தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அறிவிப்பு..!!

Published

on

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் 3 மாநிலங்களில் காலியாக இருக்கும் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் வரும் ஜூலை 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில், தமிழகத்தின் காலியிடங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. பீகாரின் பாங்கிபூர், மத்தியப் பிரதேசத்தின் டாட்டியா மற்றும் குஜராத்தின் மஞ்சள்பூர் ஆகிய தொகுதிகளுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும்.

விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதி மட்டுமின்றி, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் காலியான மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் (அம்பை) மற்றும் விராலிமலை ஆகிய 5 தொகுதிகளும் தமிழ்நாட்டில் தற்போது காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 6 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் தள்ளிவைப்பு அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in