“காவல்துறையை வைத்து மக்களை கொன்று குவிச்சாங்க” ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு… தமிழக அரசியலில் பரபரப்பு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காவல்துறையை வைத்து மக்களை கொன்று குவிச்சாங்க” ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு… தமிழக அரசியலில் பரபரப்பு..!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக காவல்துறையை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி இணைப்பு விழா மேடையில் பேசிய அவர், “கரூரில் காவல்துறையை வைத்து எங்கள் மக்களை கொன்று குவித்தார்கள்” என்றும், இந்த சம்பவத்திற்கு தவெக நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்றும் ஆவேசமாகப் பேசியுள்ளார். கரூரில் நடந்த அசம்பாவிதம் வெறும் நிர்வாகக் குறைபாடு அல்ல, அது தவெகவின் வளர்ச்சியைத் தடுக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல் சதி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் மரணங்கள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) விசாரணை நடத்தி வரும் வேளையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR) ஆதவ் அர்ஜுனாவின் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், அவரே நேரடியாக காவல்துறையை இவ்வாறு கடுமையாக சாடிப் பேசியிருப்பது அரசியல் தளத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in