தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம்… செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முன்ஜாமின் மனு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம்… செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முன்ஜாமின் மனு..!

Published

on

தமிழக வெற்றிக் கழக ஊத்தங்கரை எம்எல்ஏ என். இளையராஜாவிடம் சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ₹35 கோடி பேரம் பேசிய வழக்கில், திமுக பிரமுகரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரருமான வி. அசோக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி சி. குமரப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தனக்கும் இந்த பேரம் பேசும் விவகாரத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், அரசியல் உள்நோக்கத்தோடு தன் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அசோக்குமார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்

முன்னதாக, தவெக எம்எல்ஏ இளையராஜா சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் மற்றும் தொலைபேசி அழைப்பு விவரங்களின் அடிப்படையில், பேரம் பேசிய நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக அசோக்குமார் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் சென்னை காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in