LATEST NEWS
5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடியா…? நகைக்கடன் வைத்தோருக்கு அடித்தது ஜாக்பாட்…! கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய மக்களுக்கு இனிப்பான செய்தி..!!!
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் பற்றிய விவரங்களை தமிழ்நாடு அரசு தற்போது சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கடன் பெற்ற பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக, 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பாராத ஒரு ‘சர்ப்ரைஸ்’ செய்தியாக வெளியாகலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த நகைக்கடன் தள்ளுபடி திட்டம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசிடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலோ அல்லது இறுதி அறிவிப்போ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
