இவர்தான் உண்மையான ஹீரோ…! காசு இல்லப்பா.. என்று தயங்கிய பாட்டி.. ஓட்டுநர் செய்த காரியத்தைப் பாருங்க..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவர்தான் உண்மையான ஹீரோ…! காசு இல்லப்பா.. என்று தயங்கிய பாட்டி.. ஓட்டுநர் செய்த காரியத்தைப் பாருங்க..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வயதான தம்பதி ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் களைப்புடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஈ-ரிக்ஷா ஓட்டுநர், அவர்களின் சோர்வான நிலையைக் கண்டு தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அந்த முதியவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் “உங்களுக்கு எங்கே செல்ல வேண்டும்?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த முதிய பெண்மணி, “எங்களிடம் பணம் இல்லை, எங்களால் ரிக்ஷா வாடகை தர முடியாது” என்று தயக்கத்துடன் கூறியுள்ளார்.

அதைக்கேட்ட அந்த ரிக்ஷா ஓட்டுநர் சிறிதும் யோசிக்காமல் புன்னகையுடன், “உங்களிடம் யார் பணம் கேட்டது? நீங்கள் வண்டியில் ஏறி உட்காருங்கள், நீங்கள் சொல்லும் இடத்தில் கொண்டு போய் விடுகிறேன்” என்று கூறி அவர்களை வண்டியில் ஏற்றியுள்ளார். பயணம் செய்துகொண்டிருக்கும் போது, வெயிலின் தாக்கத்தை உணர்ந்த ஓட்டுநர், அவர்களுக்குக் குடிக்க ஏதேனும் குளிர்பானம் வேண்டுமா என்று கேட்டுள்ளார். அவர்கள் “வேண்டாம்” என்று மறுத்த போதிலும், ஓட்டுநர் வண்டியை ஒரு கடையின் அருகே நிறுத்தி, தனது சொந்தப் பணத்தில் இரண்டு ‘புரூட்டி’ குளிர்பானங்களை வாங்கிக் கொடுத்து அவர்களின் தாகத்தைத் தணித்துள்ளார்.

Advertisement

https://www.instagram.com/reel/DZR4tRpvvdD/?utm_source=ig_web_button_share_sheet

@fahimautowala என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த நெகிழ்ச்சியான வீடியோ, இணையவாசிகளின் இதயங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. “பிறருக்கு உதவ கோடீஸ்வரராக இருக்க வேண்டிய அவசியமில்லை, பெரிய மனது இருந்தாலே போதும்” என்றும், “இவர்தான் உண்மையான ஹீரோ, கடவுள் இவருக்கு நல்ல முன்னேற்றத்தைத் தருவார்” என்றும் இந்த ஓட்டுநரின் மனிதநேயமிக்க செயலை நெட்டிசன்கள் பாராட்டி கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in