“பாஜக அவுட்.. தவெக இன்?!”.. புதுச்சேரி ஆட்சியைத் தக்கவைக்க ரங்கசாமி போட்ட ரகசிய ஸ்கெட்ச்.. பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாஜக அவுட்.. தவெக இன்?!”.. புதுச்சேரி ஆட்சியைத் தக்கவைக்க ரங்கசாமி போட்ட ரகசிய ஸ்கெட்ச்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியிடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இந்த அரசியல் இழுபறி காரணமாக, தற்போது வரை அங்கு சபாநாயகரைத் தேர்வு செய்வதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. ஒருவேளை பாஜகவுடனான மோதல் முற்றினால், அவர்களைக் கழற்றிவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவோடு ஆட்சியமைக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக தவெக கூட்டணியில் வென்றுள்ள 3 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற ரங்கசாமி ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அங்கு நடந்து முடிந்த தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் மற்றும் அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடித் திருப்பங்களால் புதுச்சேரி அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in