LATEST NEWS
தவெக-வில் வெடித்த அதிகார யுத்தம்.. ஜான் ஆரோக்கியசாமிக்கு ‘துணைத் தலைவர்’ பதவி?.. விஜய் எடுத்த அதிரடி முடிவு… கொதிக்கும் ஆதவ் அர்ஜுனா.. தமிழக அரசியலில் அடுத்த புயல்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக ஆலோசகராகப் பணியாற்றிய ஜான் ஆரோக்கியசாமி, தற்போது கட்சியின் துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற ரகசிய வலை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனது. தவெ.க தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை துணைத் தலைவர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. தற்போது விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தி வருவதால், கட்சியை முழுநேரமாகக் கவனிக்கத் தனக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரை நியமிக்க அவர் விரும்புவதாகவும், அதன் அடிப்படையில் ஜான் ஆரோக்கியசாமிக்கு இந்தப் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற அரசு அமைச்சரவைக் கூட்டத்தில், அரசுப் பொறுப்பில் இல்லாத முதல்வர் விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் பங்கேற்றதாக எழுந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்துப் புகார் அளித்தன.
ஏற்கனவே தனிச்செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி நியமனத்தில் சர்ச்சை நிலவி வரும் சூழலில், தற்போது விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது த.வெ.க அரசுக்குப் புதிய தலைவலியாக மாறியுள்ளது. தற்போது த.வெ.க-வில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முக்கிய அதிகார மையங்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், விஜய்யிடம் நேரடியாகப் பேசும் வாய்ப்பும், அவரது முழு நம்பிக்கையும் கொண்ட ஜான் ஆரோக்கியசாமி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டால், அது புதிய அதிகார மையத்தை உருவாக்கும் என்பதால் இதனை ஆதவ் அர்ஜுனா தரப்பு ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே உட்கட்சிப் பூசல் மற்றும் பழைய நிர்வாகிகளின் அதிருப்தி நிலவி வரும் வேளையில், ஜான் ஆரோக்கியசாமியின் இந்த நேரடி அரசியல் என்ட்ரி த.வெ.க தலைமையிலேயே புதிய அதிகார மோதலை உருவாக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
