CINEMA
மாஸ் ரீ-என்ட்ரி..!விஜய் மிஸ் பண்ணிய மெகா ஹிட்.. மாதவனின் வாழ்க்கையை மாற்றிய ‘ரன்’ மீண்டும் ரிலீஸ்..!ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள்..!!
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் உலுக்கிய திரைப்படம் ‘ரன்’. மாதவனை ஒரு சாக்லேட் பாயிலிருந்து அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய பெருமை இந்த பிளாக்பஸ்டர் படத்தையே சேரும். இவர்களது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்த இந்த திரைப்படம், உண்மையில் இவர்களுக்காக உருவானது அல்ல என்ற சுவாரசியமான பின்னணி தற்போது பேசப்பட்டு வருகிறது. அப்போது ‘தமிழன்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜய், இந்த கதையைக் கேட்டுவிட்டு, ‘தமிழன்’ போன்ற ஒரு பெரிய படத்திற்குப் பிறகு இந்த கதை மிகச் சிறியதாகத் தோன்றும் எனக் கருதி இதில் நடிக்க மறுத்துவிட்டார்.
விஜய் தவறவிட்ட இந்த மாஸ் வாய்ப்பு, மாதவனின் சினிமா வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி, பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்தது. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள இந்த அதிரடி காதல் காவியம், தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது. வரும் ஜூலை 10-ஆம் தேதி ‘ரன்’ திரைப்படம் டிஜிட்டல் வடிவில் மீண்டும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், தியேட்டர்களில் தட்டுகளைப் பறக்கவிட ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
