இனி என்ன பெயர் தெரியுமா?மகளிர் பேருந்துகளில் மாயமான ‘விடியல்’ – தவெக ஆட்சியின் அடுத்த அதிரடி! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி என்ன பெயர் தெரியுமா?மகளிர் பேருந்துகளில் மாயமான ‘விடியல்’ – தவெக ஆட்சியின் அடுத்த அதிரடி!

Published

on

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களின் பெயர்களைத் தொடர்ந்து மாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இலவச பேருந்துப் பயணத் திட்டத்தின் பெயரிலும் தற்போது அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளின் முகப்பு மற்றும் டிஸ்ப்ளே போர்டுகளில் இடம்பெற்றிருந்த ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற வாசகத்தில் இருந்து ‘விடியல்’ என்ற சொல் நீக்கப்பட்டு, இனி ‘மகளிர் பயணம்’ என்று மட்டுமே அழைக்கப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர் மற்றும் பெயர் மாற்றும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 2021-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், முதல் கோப்பாக கையெழுத்திட்டு தொடங்கி வைத்தது இந்த மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய திமுக அரசின் முக்கிய அடையாளமாக விளங்கிய இத்திட்டத்தின் பெயர் தற்போது மாற்றப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே ‘நான் முதல்வன்’, ‘முதலமைச்சர் படைப்பகம்’ போன்ற முந்தைய அரசின் முக்கியத் திட்டங்களின் பெயர்கள் தவெக அரசால் மாற்றப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பெயர் மாற்றப் பட்டியலில் பெண்களுக்கான இலவச பயணத் திட்டமும் இணைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in