LATEST NEWS
மம்தாவுக்கு மெகா அதிர்ச்சி..! பா.ஜ.க-வில் ஐக்கியமான.. 3 முக்கிய திரிணாமுல் எம்.பி.க்கள்..!!
மேற்குவங்க அரசியலில் மம்தா பானர்ஜிக்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.க்கள் 3 பேர் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடந்த அம்மாநில சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, மம்தாவின் நம்பிக்கைக்குரிய தலைவர்களாக இருந்த சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிக் பரேக் ஆகியோர் தங்களது எம்.பி பதவிகளையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
தேர்தல் தோல்விக்கு பிறகு, மேற்குவங்க சட்டசபையில் மம்தா பானர்ஜிக்கு எதிராக ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் 61 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ரிதப்ரதா பானர்ஜி அம்மாநில சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்தான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய எம்.பி.க்கள் அக்கட்சியை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மாநிலங்களவை எம்.பி.க்களான சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிக் பரேக் ஆகிய மூவரும் கொல்கத்தாவில் இன்று அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க-வில் இணைந்தனர். பா.ஜ.க மாநிலத் தலைவர் அவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து, முறைப்படி உறுப்பினர் அட்டைகளை வழங்கி வரவேற்றார்.
