LATEST NEWS
FLASH: அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளராக அப்சரா ரெட்டி நியமனம்.. எடப்பாடி அதிரடி..!!
அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்த திருநங்கை அப்சரா ரெட்டியை, கட்சியின் துணை கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், கட்சியில் நீண்ட காலமாகத் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிமுகவில் இருந்து சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் விலகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உள்ளிட்ட பிற கட்சிகளில் இணைந்து வரும் சூழ்நிலை நிலவுகிறது. இந்த இக்கட்டான கட்டத்திலும் கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு, உறுதுணையாகச் செயல்பட்டு வரும் விசுவாசமான தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இபிஎஸ் இப்பதவிகளை வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே, கட்சியின் பிரச்சாரப் பணிகளை வலுப்படுத்த அப்சரா ரெட்டி உள்ளிட்ட பல்வேறு திறமையான நிர்வாகிகளுக்குப் புதிய பொறுப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
