“நான் ஏன் பதவி விலகணும்?” 47 சீட் ஜெயிக்க வச்சிருக்கேன்… இபிஎஸ் முகத்துக்கு நேராகவே ராஜினாமா கேட்கும் நிர்வாகிகள்… அதிமுக கூட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் ஏன் பதவி விலகணும்?” 47 சீட் ஜெயிக்க வச்சிருக்கேன்… இபிஎஸ் முகத்துக்கு நேராகவே ராஜினாமா கேட்கும் நிர்வாகிகள்… அதிமுக கூட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு…!!

Published

on

சமீபத்தில் ந டைபெற்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மதுரை பகுதிச் செயலாளர் கந்தன், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி தனது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நேரடியாகக் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு உடனடியாகப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “நான் ஏன் பதவி விலக வேண்டும்? இந்தத் தேர்தலில் அதிமுகவை 47 தொகுதிகளில் வெற்றிபெற வைத்துள்ளேன்” எனத் தனது தரப்பு நியாயத்தைக் கூறி அக்கோரிக்கையை நிராகரித்துள்ளார். தோல்வி குறித்து விவாதிக்கப்பட்ட கூட்டத்திலேயே தலைவருக்கு எதிராக நிர்வாகி ஒருவர் குரல் எழுப்பியது கூட்டத்திலிருந்த மற்ற நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

இதனிடையே, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவிக்க முற்படும் தலைவர்களையும் நிர்வாகிகளையும் முழுமையாகப் பேச அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவுக்குள் வெடித்துள்ள இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் காரசார விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in