“டிக்கெட் கவுண்ட்டரில் தூங்கிய குழந்தையை.. கடத்தி சென்று சீரழித்த காமக்கொடூரன்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி… குஜராத்தில் அரங்கேறிய அதிரடி என்கவுண்டர்..!! – cinefeeds
Connect with us

CRIME

“டிக்கெட் கவுண்ட்டரில் தூங்கிய குழந்தையை.. கடத்தி சென்று சீரழித்த காமக்கொடூரன்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி… குஜராத்தில் அரங்கேறிய அதிரடி என்கவுண்டர்..!!

Published

on

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில், 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் பர்மர் என்ற நபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வாசாத் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டர் அருகே தூங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை சுரேஷ் பர்மர் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், குற்றத்தை மறைப்பதற்காகச் சிறுமியை ரயில் தண்டவாளத்தில் தூக்கி வீசியுள்ளார். இரவோடு இரவாக வந்த ரயில் மோதியதில் உடல் நசுங்கி அந்தப் பிஞ்சு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சிறுமியை அந்த நபர் கடத்திச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

Anand, Gujrat – The accused in the horrific rape and murder of a 4-year-old girl was killed in a police encounter in Anand district.The minor girl was allegedly raped by the accused, identified as Suresh Parmar, who then threw her on the railway tracks. She was crushed by a train… pic.twitter.com/I6R4851vc9— NextMinute News (@nextminutenews7) July 20, 2026

கைது செய்யப்பட்ட குற்றவாளியைச் சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இந்த என்கவுண்டர் சம்பவம் அரங்கேறியுள்ளது. போலீஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தனக்கு வாந்தி வருவதாகக் கூறி, வாகனத்தை சாலையோரமாக நிறுத்தும்படி சுரேஷ் பர்மர் கேட்டுள்ளார். வண்டி நிறுத்தப்பட்டதும், அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரை திடீரெனத் தாக்கி, இரண்டு அதிகாரிகளைக் காயப்படுத்தியுள்ளார். அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராணா எச்சரித்த பிறகும் அவர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால், போலீசார் தற்காப்பிற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த குற்றவாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in