LATEST NEWS
“என் உயிருக்கு உலைவைத்தால் ஈரானுக்கு அழிவு உறுதி!”… அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் பேட்டி.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!!
தன்னை படுகொலை செய்ய ஈரான் முயற்சித்தால், அந்நாட்டின் மீது வரலாறு காணாத அளவில் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவுக்கு டான் அறிவுறுத்தி உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “நியூயார்க் போஸ்ட்” இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரானின் இலக்கு பட்டியலில் தான் நீண்டகாலமாகவே முதலிடத்தில் இருப்பதாகவும், இதுதான் தற்போதைய கள நிலவரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை கொலை செய்ய ஈரான் தீட்டிய புதிய சதித்திட்டம் குறித்து இஸ்ரேல் அமெரிக்காவுக்கு உளவுத் தகவல்களை அளித்ததாக வெளியான செய்திகளையும் ட்ரம்ப் மறுத்துள்ளார். “இஸ்ரேல் எந்தவொரு புதிய தகவலையும் தரவில்லை. என்னை வீழ்த்த ஈரான் பல ஆண்டுகளாகவே நினைத்துக்கொண்டிருக்கிறது, அதுதான் வாழ்க்கை” என்று அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
2020-ஆம் ஆண்டு ஈரானிய ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்கி கொன்றது. இந்த தாக்குதலுக்கு ட்ரம்ப் தான் உத்தரவிட்டிருந்தார். இதற்காக அவரை பழிவாங்க ஈரான் தொடர்ந்து சபதம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
