LATEST NEWS
“ஆறுன்னு நினைச்சியோ ரோடுப்பா அது”.. தேங்கிய மழை தண்ணிரில் இவரு செஞ்ச “அட்ராசிட்டி” இருக்கே.. இணையத்தை சிரிக்க வைத்த வைரல் வீடியோ..!!
நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சிலர் தங்களுக்குச் சாதகமாக வேடிக்கையாக மாற்றி மகிழ்ச்சியடையும் சுவாரஸ்யமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வரும் ஒரு புதிய காணொளியில், நபர் ஒருவர் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் சௌகரியமாகப் பொழுதுபோக்குவதைக் கண்டு மக்கள் சிரித்து மகிழ்கின்றனர். பொதுவாக வெள்ளம் சூழ்ந்த சாலைகளை மக்கள் தவிர்க்க நினைக்கும் நிலையில், இந்த நபர் எவ்வித பதற்றமும் இன்றி வித்தியாசமான முறையில் மழையை ரசிக்க முடிவு செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தக் காணொளியில், சாலையில் ஓடும் அதிகப்படியான மழைநீரின் மீது, அந்த நபர் ஒரு பெரிய நுரைத் துண்டை மிதக்க விட்டு, அதன் மேல் சொகுசாகப் படுத்துக் கொள்கிறார். நீரின் நீரோட்டம் அவரை மெதுவாக முன்னோக்கி இழுத்துச் செல்ல, அவர் ஏதோ ஒரு ஆற்றில் படகு சவாரி செய்வதைப் போல மிகவும் நிதானமாகப் பயணிப்பது பார்ப்போரைக் கவர்ந்துள்ளது. இந்த அசாதாரணமான காட்சியைக் கண்டு திகைப்படைந்த அங்கிருந்த பொதுமக்கள், தங்களின் கைபேசிகளில் இதனைப் பதிவு செய்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் இந்த நபரின் விசித்திரமான யோசனையைப் பாராட்டியும், வேடிக்கையான கருத்துக்களைப் பதிவிட்டும் இக்காணொளியை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
