LATEST NEWS
“இனி ஒரு கப்பல் கூட போக முடியாது”.. ஈரான் எடுத்த விஸ்வரூப முடிவு.. உலக வர்த்தகத்திற்கு விழுந்த பலத்த அடி..!!
வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. தங்களுக்கு எதிராக அமெரிக்கா ஏதேனும் ராணுவ நடவடிக்கையில் இறங்கினால் இந்த அதிரடி பதிலடி கொடுக்கப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், சர்வதேச அளவில் மிக முக்கிய கடல்வழிப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை மூடுவதாகவும் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் இந்த அதிரடி அறிவிப்பு உலக அரங்கில் பெரும் பதற்றத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது. வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கமும் தலையீடுகளும் முழுமையாக ஓயும் வரை, ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய நரம்பாகத் திகழும் இந்நீரிணை மூடப்பட்டிருப்பதால், சர்வதேச எரிபொருள் விநியோகம் முடங்கி, உலகப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
