CRIME
“சீ… இவனெல்லாம் ஒரு அப்பனா…?” மகளைச் சீரழித்து.. அந்தரங்கப் படங்களை லீக் செய்யப் பார்த்த மிருகம்… பகீர் பின்னணி..!!!
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், தனது மாமியார் வீட்டில் வைத்து அண்மையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 75 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு காவல்துறையினர் அவரிடம் மரண வாக்குமூலம் பதிவு செய்தபோது, கடந்த பல ஆண்டுகளாகத் தனது சொந்தத் தந்தையாலேயே தான் பாலியல் ரீதியாகத் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறி அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆவார். அவர் தனது மகளின் மாமனாரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தைத் திருப்பித் தருமாறு மாமனார் கேட்கவே, அப்பெண் தன் தந்தையிடம் அது குறித்துப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகளை மிரட்டியதோடு அவளுடைய அந்தரங்கப் புகைப்படங்களைப் பொதுவெளியில் இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இந்த மன உளைச்சலாலேயே அப்பெண் தீக்குளிக்கும் விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த 57 வயது தந்தையைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் இரண்டு நபர்களின் பெயர்களையும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளதால், அது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளதோடு, தந்தை மற்றும் மகளின் கைபேசிகளையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
