“டிகிரி முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. சம்பளம் ரூ.1,40,000 வரை.. உடனே அப்ளை பண்ணுங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டிகிரி முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. சம்பளம் ரூ.1,40,000 வரை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

Published

on

இந்திய பருத்தி கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறுவனமான இதில், மொத்தம் 148 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலாண்மைப் பயிற்சியாளர், உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசிஸ்டன்ட் ஆகிய பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் பணியிடங்களுக்கு ஏற்ப B.Com, B.Sc அல்லது B.A ஆகிய இளங்கலை பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு மாதச் சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.40,000 முதல் அதிகபட்சம் ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.

இப்போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ₹1,770-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகிய வழிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்-ஐ (https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/5/5601370283.pdf) பயன்படுத்தி ஜூலை 24-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in