கணவன் – மனைவி இருவருக்கும் அரசு வக்கீல் சீட்.? ஒரே குடும்பத்திற்கு இரண்டு அரசாங்க பதவியா..? தவெக அமைச்சரின் பரிந்துரையால் கொதித்தெழுந்த கட்சிக்காரர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கணவன் – மனைவி இருவருக்கும் அரசு வக்கீல் சீட்.? ஒரே குடும்பத்திற்கு இரண்டு அரசாங்க பதவியா..? தவெக அமைச்சரின் பரிந்துரையால் கொதித்தெழுந்த கட்சிக்காரர்கள்..!!

Published

on

சேலம் மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்களைநியமிப்பதில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்களிடையே கடுமையான அதிகாரப் போட்டி நிலவி வருவதால் அந்தப் பணி பெரும் இழுபறியில் நீடித்து வருகிறது. தங்களுக்குச் சாதகமான வழக்கறிஞர்களைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற நோக்கில், இரு அமைச்சர்களும் தங்களின் ஆதரவாளர்கள் அடங்கிய தனித்தனி பட்டியல்களைத் தலைமைக்கு வழங்கியுள்ளனர்; இந்த மோதலே நியமன தாமதத்திற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கறிஞர்கள் தேர்வுப் பட்டியலில் ஒரு அமைச்சர் வழங்கிய பரிந்துரையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் – மனைவி ஆகிய இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருப்பது தவெக கட்சிக்காரர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு விசுவாசமாக உழைத்த பிற தகுதியான வழக்கறிஞர்களைப் புறக்கணித்துவிட்டு, ஒரே குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அமைச்சரின் இந்தச் செயல், உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in