LATEST NEWS
“வகுப்பறையே இவங்களுக்கு லவ்ஸ் பண்ணும் இடமா..?” ஆசிரியை உடன் உல்லாசமாக இருந்த கணவன்.. ரகசிய கேமரா வைத்து பொறிவைத்த மனைவி… உ.பி அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம் சௌரிக் பிளாக்கில் உள்ள பஜேடி அரசுப் பள்ளியில், பணிபுரியும் ஒரு ஆண் ஆசிரியரும், பெண் ஆசிரியையும் வகுப்பறைக்குள்ளேயே பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சம்பந்தப்பட்ட ஆண் ஆசிரியரின் நடத்தையில் சந்தேகமடைந்த அவரது மனைவி, வகுப்பறையில் இரகசியக் கேமரா பொருத்தி இவர்களின் ஆபாச லீலைகளைப் பதிவு செய்துள்ளார். குடும்ப நீதிமன்றத்தில் கணவனுடன் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், ஆசிரியரின் மனைவியே இந்த வீடியோக்களைப் பொதுவெளியில் கசியவிட்டுள்ளார்.
https://twitter.com/Sanatnimaneesh/status/2077231972485931187/video/1
மாணவர்களுக்கு நல்வொழுக்கத்தைக் கற்றுத்தர வேண்டிய பள்ளிக்கூட வகுப்பறையிலேயே ஆசிரியர்கள் இவ்வாறு கண்ணியம் குறைந்து நடந்துகொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையேயும் பெற்றோர்களிடமும் கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் கல்வித்துறையின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, தீவிர விசாரணைக்கு உத்தரவிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆசிரியர் அவதேஷ் பால் மற்றும் ஆசிரியை பூஜா ராணி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
